மும்முனை கிரிக்கெட் போட்டி: பங்களாதேஷிடம் இலங்கை படுதோல்வி!

டாக்காவில் நடைபெற்று வரும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியை பங்களாதேஷ் அணி 163 ஓட்டங்களால் வெற்றி கொண்டது

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில், பங்களாதேஷ் அணி சார்பில் அனாமுல் ஹக் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தமீம் இக்பால் தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 40 ஆவது அரைச்சதத்தை இன்று பூர்த்தி செய்ததுடன், 84 ஓட்டங்களை இதன்போது பெற்றுக்கொண்டார்.

ஷகீப் அல் ஹஸன் 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மொஹமட் மஹமுதுல்லா 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், முஸ்பிகர் ரஹீம் தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 28 ஆவது அரைச்சதத்தைக் கடந்து 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அணித்தலைவர் மஷ்ராப் மொடாசாவிற்கு 6 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்

321 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like