யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு: தொடரும் சோகம்

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

நேற்றிரவு தம்பதியர்களிற்கிடையில் தர்க்கம் உருவாகியதாகவும், கணவனால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டதையடுத்து, அவரது கணவர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே, எதையும் உறுதியாக தெரிவிக்கலாமென பொலிசார் தெரிவித்தனர்.