ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதி உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வதானால் தேசிய அடையாள அட்டை முறைமையை பயன்ப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மருத்துவ தேவைகளுக்காக வெளியே செல்வோரிடம் உரிய காரணத்திற்கான சான்றுகள் காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும். அந்த வகையில் திங்கட் கிழமை நாள்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும்.
வாரத்தின் ஏனைய நாள்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.
செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்






