யாழில் மக்கள் வாழும் பகுதியில் நடந்த அநியாயம்! மடக்கிப் பிடிபட்ட ஆசாமிகள்

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் அத்தியாவசிய சேவை என்ற பதாகையுடன் சென்ற பவுசர் மலக்கழிவுகளை கொட்டியுள்ளது.

கல்லுண்டாய், கொத்துகட்டி வீதிக்கு அண்மையாக நேற்று மாலை மலக்கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த தனியார் பவுசரை அந்த பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர்.

பவுசரில் இருந்த இருவரையும் பொதுமக்கள் பிடித்து வைத்தனர்.

உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பவுசரும், இரண்டு நபர்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.