சற்று முன்னர் வெளியாகியது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.doenets.lk/examresults என்ற இணை முகவரிக்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால், பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு இப்போது தபாலில் அனுப்பிவைக்கப்படாது. எனினும் பாடசாலை அதிபர்களுக்கு பெறுபேறுகள் இணையத்தில் (ஒன்லைன்) கிடைக்கும்.

மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு இணையம் ஊடாக பெறுபேகளை அனுப்பிவைக்கப்படும்.