சாதாரண தரப் பரீட்சையில் ரஞ்ஜன் ராமநாயக்கவின் கனவு நிறைவேறியது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு சட்டம் படிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அவர் ஆங்கிலப் பாடத்திற்கான பரீட்சைக்கு தோற்றி இருந்தார்.

சட்டக்கல்லூரியிலும் அல்லது வேறு வழியிலும் சட்டத்துறையில் கற்று பல வழக்குகளுக்காக வாதாடவும் குறிப்பாக வறியவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்நிற்கவும் போவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் அவர் இன்று வெளியான சாதாரண தர பெறுபேற்றில் சட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பாக ஆங்கிலப் பாடத்தில் சி சித்தியைப் பெற்றுள்ளார்.