யாழில். தாய்ப்பால் புரைக்­கேறி இரண்டு மாதக் குழந்தை பரிதாப மரணம்!

தாய்ப்பால் புரைக்­கேறி இரண்டு மாதக் குழந்தையொன்று யாழில் பரிதாபகரமாக உயி­ரி­ழந்­துள்­ளது. யாழ். நகரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் சஞ்சி என்ற ஆண் குழந்­தையே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்­று­முன்­தி­னம் புதன்கிழமை(16) இரவு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுத்து உறங்க வைத்­தார். நேற்று அதி­காலை பார்த்­த­போது குழந்­தை­யின் மூக்­கின் ஊடா­கத் தாய்ப்­பால் வடிந்திருந்தது. குழந்­தை­யில் எந்த அசை­வும் காணப்படவில்லை. இதனையடுத்துக் குழந்தை உறவினர்களின் உதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்­டது. எனினும், குழந்தை ஏற்­க­னவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like