ஆசிரியர்களுக்கான இணைய வழி இலவச செயலமர்வு நாளை இடம்பெறவுள்ளது

ஆசிரியர்களுக்கு Google Forms மூலமாக பாட வினாத்தாள்களை உருவாக்குதல் தொடர்பிலான இணைய வழி இலவச செயலமர்வு 30.04.2020 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இணையத்தில் சிறகுகள் அமையம்” மற்றும் “சுவடி நிறுவகம்” இணைந்து குறித்த செயலமர்வினை நடாத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த செயலமர்வில் தன்னார்வலர்களாக வினாத்தாள்களை உருவாக்க விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தோரும் கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலமர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் edu.sirakukal.online எனும் இணையத்தளம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும் . மேலதிக விபரங்களுக்கு 0764658482 எனும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ளமுடியும் .

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளில் எமது கல்வி முறைகளில் மற்றம் கொண்டுவர வேண்டிய தேவைப்பாடு எமது கல்விச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த செயலமர்வு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.