தனுஷ் படத்தில் இணைந்த இளையராஜா

தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் மாரி. தனுஷ், காஜல் அகர்வால் இணைந்து நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலாஜியும் தனுஷும் மீண்டும் இணைந்து மாரி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

பிரேமம் படம் மூலம் கவனம் ஈர்த்த சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

ஜனவரி மாத இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘மாரி 2’ படத்திற்காக இளையராஜா நேற்று (ஜனவரி 16) ஒரு பாடல் பாடியுள்ளார். இதை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அதில் பதிவேற்றியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பிரசன்னா படத்தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார். தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like