கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் இன்று (ஏப்ரல் 29) புதன்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
136 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
506 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோரோனா தோற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) 120 பேருக்கே சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்ட நிலையில் 150 பேருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்படுகிறது.
அதனால், கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.






