முக­நூ­லால் பறி­போ­னது 7 லட்­சம் ரூபா பணம்!

முக­நூல் நட்­பால் பல இலட்­சம் ரூபாவை இழந்த கொழும்பு பல்­க­லைக்­க­ழக மாணவி தொடர்­பில் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. கொழும்பு பல்­க­லைக் கழ­கத்­தில் ஆயுள்­வேத பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­ளும் மாணவி ஒரு­வரே இவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்.

அவ­ரி­டம் இருந்து 7 இலட்­சத்து 75 ரூபா பணம் மோசடி செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மாண­வி­யு­டன் முக­நூல் ஊடாக நட்­பு­றவை ஏற்­ப­டுத்தி பெரி­ய­ளவு பரிசு பெற்­றுக் கொள்ள முடி­யும் என்று மோச­டி­யா­ளர் தெரி­வித்­துள்­ளார். அதனை நம்பி ஏமாந்த பெண் மோச­டி­யா­ள­ரின் வங்­கிக் கணக்­கில் 7 இலட்­சத்து 75 ரூபா பணத்தை வைப்­பிட்­டுள்­ளார்.

கடந்த 3ஆம் திகதி பரிசு கிடைக்­கும் என்று தொலை­பேசி அழைப்பு மேற்­கொண்ட நபர் குறிப்­பிட்­டுள்­ளார். பரிசு வந்து சேரா­மை­யால் தான் ஏமாற்­றப்­பட்டுள்­ள­தை மாணவி அறிந்­துள்­ளார். இது தொடர்­பில் கும்­பு­ரு­பிட்டி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.