யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! வீட்டிற்கு வழியனுப்பி வைத்த வைத்தியர்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் இன்று வீடு திரும்பினார்.

சில வாரங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின்னர், இன்று தாயும் சேய்களும் வீடு திரும்பினர்.

இதன்போது வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.