சட்டவிரோத போதைப் பாவனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சாவகச்சேரி பிரதேச சபை 16ம் வட்டார உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகன் காது நேற்றைய தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதே அவரது காது துண்டிக்கப்பட்டுள்ளது.
மறவன்புலவு பகுதியில் இடம்பெற்று வரும் கசிப்பு வடிக்கும் விடயத்தை பிரதேசசபையின் கவனத்துக்கு அவர் நேற்று சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






