பேஸ்புக்கில் வெளியான காணொளி! நான்கு சிறுவர்கள் தடுத்து வைப்பு

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட குழந்தைகள் இடம்பெறும் வன்முறை காணொளி தொடர்பில் நான்கு சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கத்தியுடன் இருக்கும் சிறுவன் தவறான வார்த்தைகளை பேசும் காணொளி ஒன்று பேஸ்புக்கில் வைராகியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் தன்னை “நிகவெரதிய சஹான்” என்ற அடையாளப்படுத்திய சிறுவனும், பேஸ்புக் காணொளியில் அவர் பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த காணொளி தொடர்பில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுபோன்ற காணொளிகளை பதிவிடுவதும், பகிர்வதும் தொடர்பில் எவரும் கண்டறியப்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.