மத்திய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதை கூறியுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கரையோர பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்யும் சாத்தியங்கள் உள்ளது.
மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.






