எமது பாடசாலை மாணவி செல்வி சிவாபிரபு இசைப்பிரியா 9A சித்தி பெற்றதை தொடர்ந்து மாணவி தொடர்பில் பல்வேறு வதந்திகள் பல்வேறுபட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றது.
இசைப்பிரியா கிளி/விவேகானந்த வித்தியாலய மாணவியாவார்.இவரது தாயார் சங்கீத பாட ஆசிரியராக கிளிநொச்சியில் பணிபுரிவதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலேயே வசித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது_தாயாரை இழந்து முல்லைத்தீவில் பாதுகாவலருடன் வசிக்கின்றார் என்பதான உண்மைக்குப்புறம்பான செய்தி வெளியாகியிருப்பது வேதனைக்குரியதாகும்.
செய்தியில் குறிப்பிடப்பட்ட செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவிற்கும் எமது பாடசாலை மாணவி இசைப்பிரியாவிற்கும் எவ்வித உறவுநிலைத்தொடர்பும் இல்லை.
எனவே உண்மைகளை வெளியிடும் என மக்கள் நம்பிக்கையோடு பார்க்கப்படும் சமூக ஊடகங்கள் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தவறான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதனை பாடசாலைச்சமூகம் கவலையுடன் சுட்டிக்காட்டுவதுடன் வன்மையாக கண்டிக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளது.






