கிளிநொச்சியில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 53 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, இதில் நான்கு மாணவர்கள் விசேட( மெறீட்) சித்தியுமடைந்துள்ளனர்.
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like