நாளை முதல் ரயில், பஸ் சேவைகளுக்கு புதிய திட்டம்

நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மற்றும் ரயில்வே திணைக்களத்தின் தொடருந்து சேவைக்கு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கை போக்குவரத்து சபை மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை அத்தியாவசிய சேவைகளுக்கு என தனியான பேருந்து சேவை இடம்பெறும் என கூறப்பட்டிருந்த நிலையில் அதற்கான சேவைக்கு ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பேருந்துகளை வழங்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாளை முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு அலுவலகங்களுக்குச் செல்லும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான அனைத்து வழித்தடங்களிலும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களால் விண்ணப்பிக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சேவைக்காக திணைக்களத் தலைவர்களிடமிருந்து வாரந்தோறும் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைக்கு முன்னர் விண்ணப்பங்கள் நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தொடருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் அறிவிக்கப்படும் எனவும் தொருந்து நிலையத்திற்கு நுழையும் போது, பாதுகாப்புப் படையினருக்கு குறுந்தகவல் காட்டப்பட வேண்டும் என்றும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தொருந்து நிலையத்திற்கு நுழையும் போது, பாதுகாப்புப் படையினருக்கு குறுந்தகவல் காட்டப்பட வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.