“வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 311 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கடற்படையினருடன் தொடர்புடைய ஆயிரத்து 23 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்”
இவ்வாறு இராணுவத் தளபதியும் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
“வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் 204 கடற்படைச் சிப்பாய்களுக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடைய 107 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் விடுவிப்பில் சென்ற கடற்படையினரின் குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கோரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 23 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என்றும் இராணுவத் தளபதி கூறினார்.






