யாழில் 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்த பெண்மணி!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கேணியடியில் பொங்கலுக்காக அதிகாலை எழுந்து வீட்டுனைத் திறந்து கோலமிட்ட பெண்மணி 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்தார்.

கொக்குவில் கேணியடிப்பகுதியில் நந்தினி வெதுப்பகத்திற்கு அண்மையில் வசிக்கும் கணவனும் மணைவியும் தனியாக வாழும் குடும்பத்தினர் அண்மையிலேயே பிள்ளைகளிடம் லண்டன் சென்று திரும்பியிருந்தனர் . இந்த நிலையில் தைப்பொங்கல் தினத்தன்று பொங்கலிற்காக அதிகாலையில் எழுந்த வீட்டின் கதவுகளை திறந்து கோலம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தவேளையில் வீட்டின் பின் கதவு வழியாக உள் நுழைந்த திருடர்கள் இத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலையில் எழுந்த பெண்மணி வீட்டின் வாசலில் கோலம் இடும் பணியில் நீண்ட நேரம் ஈடுபட்டிருந்துள்ளார் . இந்த சமயம் கணவர் உறக்கத்தில் இருந்துள்ளார். அச் சமயம் வீட்டின் கதவு வழியாக உள்நுளைந்த கொள்ளையர்கள் சாமி அறையில் அலுமாரியில் நகை மற்றும் பணம் என்பவை வைக்கக்பட்டிருந்த பணப்பையினை களவாடியவாறு வீட்டின் மதிலினால் ஏறித் தப்பியோடியுள்ளார்.

குறித்த கொள்ளை தொடர்பில் கருத்து வெளியிட்ட வீட்டின் உரிமையாளர் தர்மராயா

நான் உறக்கத்தில் இருந்தபோது அதிகாலை 6 மணியை அண்மித்தவேளையில் பதற்றத்துடன் மனைவி என்னை எழுப்பி விடயத்தினை தெரிவித்து பணம் நகை என்பன வைக்கப்பட்டிருந்த கைப் பையினைக் காணவில்லை எனக் கூறியபோதே விடயத்தினை அறிந்துகொண்டேன். எமது பிள்ளைகளிடம் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் பிள்ளைகள் தந்த நகைகள் எமது நகை என 55 பவுண் நகை வைத்திருந்தோம் அத்தோடு காசாக ஆயிரம் பவுண்ஸ்சும் 30 ஆயிரம் ரூபாவும் என அனைத்தும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் செல்லும்போது சாமி அறையில் எடுத்து வந்த பணப்பையினை வீட்டின் பின் பகுதியில் வைத்து தேடுதல் நடாத்தி அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை மட்டும் கைப்பையில் எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு இடம்பெற்ற திருட்டினை அறியாத பெண்மணி கோலம் நிறைவடைந்து வீட்டிற்குள் பிரவேசித்துள்ளார். அதன்போது சாமி அறை திறந்துள்ளதனை அவதானித்து ஓடிச் சென்று பார்த்தவேளை அலுமாரி திறந்து உள்ளதனை கண்டு பதற்றத்துடன் அவதானித்துள்ளார்.

அலுமாரியில் இருந்த பணம் , நகைகள் வைத்திருந்த கைப்பையை காணாது கணவரை அவசரமாக எழுப்பி விடயத்தை தெரிவித்து தேடியவேளையிலேயே கொள்ளை இடம்பெற்றதனை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு முறையிடப்பட்டதனைத் தொடர்ந்து பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.