கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண்ணீர் விட்ட பெண்

கொரோனா வார்டில் மருத்துவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து வேலைசெய்கின்றனர்.

கொரோனாவுக்கான மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத சூழலில் கொரோனா ஒழிப்பில் மருத்துவர்கள் ஆபத்து என்றும் தெரிந்தும் துணிந்து பணிசெய்து மக்களை காக்க முன்வரிசையில் நிற்கின்றனர்.

இப்படியான சூழலில் கொரோனா வார்டில் மருத்துவ பணிக்கு சென்று திரும்பிய ஒரு மருத்துவர் வீடு திரும்பிய போது நடந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொரோனா வார்டில் பணியை முடிந்து தனது வீட்டுக்குத் திரும்பினார்.

அப்போது அவர் குடியிருப்பில் இருக்கும் அனைவரும் சேர்ந்து அவருக்கு உற்சாகமாக வாசலில் இருந்து கைதட்டி வரவேற்கின்றனர்.

இதைத் துளியும் எதிர்பார்க்காத அந்த மருத்துவர் கண்ணீர் விடுகிறார். குறித்த அந்தக்காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.