மனைவியுடன் சென்ற கணவருக்கு பேருந்தில் ஏற்பட்ட சிக்கல்

குருநாகல் பகுதியில் தன்னுடைய மனைவியுடன் பஸ்ஸில் சென்ற கணவன் சிக்கலான விபரீதத்துக்கு முகம் கொடுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நேரத்தில், காரியாலயங்களுக்கு செல்வதற்காக பஸ்சேவை நடத்தப்பட்டது.

இதன்போது, பஸ்களில் சமூக இடைவெளியின் பிரகாரம் அனைவரும் அமர்ந்திருந்துள்ளனர்.

அப்போது அந்த பஸ்ஸில் ஏற்றிய ஜோடியொன்று, ஒரே ஆசனத்தில் மிக அருகருக்கே அமர்ந்திருந்துள்ளனர்.

பஸ் புறப்படுவதற்கு தயாரானபோது பஸ்ஸில் ஏற்றிய நடத்துனர் ஒரு ஆசனத்தில் ஒருவர் அமருமாறு பணித்தார்.

எனினும் தான் மனைவியுடன்தான் நான் பயணிப்பேன் என்று அக்கணவன் அடம்பிடித்ததுடன் மனைவியின் அருகே நின்றுக்கொண்டு பயணித்த கணவன், தாங்கள் இறங்கவேண்டிய இடத்தில் மனைவியுடன் சேர்ந்து இறங்கி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.