யுவனின் வருடும் இசை!

விஷால், சமந்தா இணைந்து நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் பாடல் ஒன்றின் லிரிக்கல் வீடியோ  ஜனவரி 14 வெளியானது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அழகே பொழிகிறாய் அருகே என்ற காதல் பாடல் மெலடி ரகத்தில் உருவாகி கவனம் ஈர்த்து வருகிறது.

அழகே ஒளி விழும் மெழுகே

விழியில் உன் இறகே

வருடிப்போனாய்

கண்மூடி காதல் நான் – ஆனேன்

என வரிகளும் இசையும் சேர்ந்து வருடுகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விவேக் வரிகளை எழுதியுள்ளார். அருண் காமந்த், ஜோனிடா காந்தி ஆகியோர் தங்கள் குரலால் பாடலுக்கு உயிர்கொடுத்துள்ளனர்.

அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கும் இந்தப் படம், டிஜிட்டல் உலகின் தகவல் திருட்டை அடிப்படையாகக்கொண்டு உருவாகியுள்ளது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். குடியரசு தின விடுமுறையைக் குறிவைத்து இந்தப் படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like