பிரித்தானியாவில் அமைச்சரான முதல் இலங்கையர்

பிரித்தானியாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரணில் ஜெயவர்த்தன புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்த்தன அந்நாட்டின் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தந்தை ஜெயவர்த்தன, 1978இல் இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்குச் சென்றவர். லண்டனில் பொருளியலில் கல்வி கற்ற ரணில், அந்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

பிரித்தானிய அமைச்சரவையில் அதிகமும் வெளிநாட்டவர்களாக இந்தியர்கள் பதவி வகித்த நிலையில், முதன் முதலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜெயவர்த்தன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவிட் 19 பரவல் சூழலில் பொருளாதாரம் மற்றும் அரசை மீளமைக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகவே இப் புதிய அமைச்சர் நியமனம் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Great to welcome @ranil who joins as a Minister at the Department for International Trade pic.twitter.com/slmGLClzlj