நாடாளுமன்ற கலைப்பு, தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தது சஜித்தின் கட்சி

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேஹய) சார்பில் நாடாளுமன்றத்தை கலைத்தமை மற்றும் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பை விடுத்தமை ஆகிய வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியிட்டமை ஆகியவை சவாலுக்கு உள்படுத்தும் வகையில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று மேலும் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

அதில் ஒரு மனுவை வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வினால் விசாரணைக்கு அழைப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளாரால் மனுதாரர் சட்டத்தரணிக்கு மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.