சியோமி கில்லராக மாறிய ஸ்மார்ட்ரான் டி.போன்

ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் புதிய மொபைலான டி.போன் சியோமி கில்லர் என்ற பெயரில் வைரலாக பரவி வருகிறது.
நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்திய மார்க்கெட்டில் முன்னிலைக்கு வந்திருக்கிறது சியோமி. இந்நிறுவனத்தின் மீ மிக்ஸ் 2 மொபைல் ஐபோன் கில்லர் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சியோமி கில்லர் என்ற பெயரில் இந்திய நிறுவனமான ஸ்மார்ட்ரான் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் வைரலாகியுள்ளது. டி.போன் பி என்ற இந்த மொபைலின் விலை ரூ.7999. இதில் 5000mAh பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசெசர் போன்ற அசத்தலான அம்சங்கள் உள்ளன.
5.2 இன்ச் தொடுதிரை, 3GB RAM, 32GB ROM, 13 பின்புற கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 4G VoLTE, ஆண்ட்ராய்ட் 7.1.1. நூகட் இயங்குதளம், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை இதன் இதர அம்சங்கள்.
பிளிப்கார்ட் மூலம் வரும் 17ஆம் தேதி முதல் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like