கொழும்பின் புறநகர் பகுதியில் மயங்கி விழுந்த நபர் திடீர் மரணம்

கொழும்பின் புறநகராகிய பிலியந்தல பிரதேசத்தில் மருந்தகமொன்றில் மயங்கிவிழுந்த நிலையில் 66 வயது நபர் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்தை அடுத்து அப்பகுதியில் மக்கள் மத்தியில் குறித்த நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்தாரோ என்ற அச்சத்தில் உறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த வயோதிபர் மாரடைப்பு காரணமாக மருந்துகளைப் பெற மருந்தகத்திற்குச் சென்றதாக தெரியவருகின்றது.