நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் ஒரு மாத காலம் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
இந் நிலையில் நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு காலிமுகத் திடல் புற்களால் நிறைந்து பச்சையாக காட்சியளிக்கின்றது.
காலிமுகத் திடல் மைதானம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1800ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அந்த காலத்தில் பொது மக்கள் பெருமளவில் அங்கு செல்வதில்லை என்பதால், மைதானத்தில் புற்கள் மனிதர்களின் கால் படாது பச்சை நிறமாகவே இருந்து வந்தது.
எனினும் அதற்கு பின்னர் காலிமுகத் திடல் பொழுது போக்கும் இடம் என்பதால், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம், இதனால், திடலில் உள்ள புல் மக்களின் நடமாட்டம் காரணமாக ஆங்காங்கே காணாமல் போயிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத கால ஊரடங்குச் சட்டம் காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்ட காலிமுகத்திடலின் சுமார் ஒரு கிலோ மீற்றர் பகுதி புற்கள் நிறைந்து பச்சை நிறமாக காட்சியளிக்கின்றது.







