இனி பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படவேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட உள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் திட்டத்தின் கீழ், இனி பிரித்தானியாவுக்குள் வரும் அனைவரும், 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இரண்டாவது முறை கொரோனா பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்புகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட இருக்கிறார்.
இந்த நடைமுறைகள் ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வர உள்ளன.
அத்துடன் பிரித்தானியாவுக்கு வருபவர்கள், தாங்கள் எங்கே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்துவதற்காக, டிஜிட்டல் படிவம் ஒன்றை நிரப்பவேண்டியிருக்கும்.
அயர்லாந்திலிருந்து வருபவர்கள், Isle of Man மற்றும் Channel தீவுகளிலிருந்து வருபவர்கள், கூடவே லொறி சாரதிகளுக்கும் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.