நான் கத்தினேன்!… அதற்குள்- 16 பேர் மீது ஏறி இறங்கிய ரயில்- நேரில் பார்த்தவரின் பேட்டி

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைப்பயணமாகச் சென்றபோது அவுரங்காபாத்தில் சரக்கு ரயிலில் சிக்கி 16 பேர் உ ட ல் ந சு ங் கி உயிரிழந்தனர்.

இந்த விடயம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் என்ன நடந்தது என்பது குறித்துபகிர்ந்து கொண்டுள் ளார்.

அவர் கூறு கையில், நாங்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள், ஜல்னாவின் எஸ்ஆர்ஜி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம்.

ஊரடங்கால் வேலையில்லாமல்,பணமில்லாமல் தவித்தோம், எனவே சொந்த ஊர் செல்லமுடிவெடுத்து வியாழன் மாலை 7 மணிக்கு புறப்பட்டோம்.

வெள்ளியன்று அதிகாலை 4 மணியளவில்அவுரங்காபாத்- ஜல்னா ரயில் பாதையை அடைந்தோம்.

சோர்வா இருந்ததால் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணினோம், சிலர் ரயில்பாதையில் ஓய்வெடுத்தனர்.

நான் சில மீட்டர் தொலைவில் படுத்திருந்தேன், அசதியில் அனைவரும் தூங்கிவிட்டனர்.

ரயில் வருவதை பார்த்ததும் நான் கத்தினேன், ஆனால் அது அவர்களுக்குகேட்கவில்லை.

அதற்குள் ரயில் அவர்கள் மீது ஏறிச் சென்றது, நொடிப்பொழுதில்16 பேரின் உயிரை குடித்துவிட்டது என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.