பிரித்தானியாவில் ஊரடங்கு விதியை மீறி 200 மைல் தூரம் தேவையின்றி காரில் பயணித்து வந்த நான்கு பேருக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டில் கடந்த ஆறு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும், தேவையின்றி வெளியில் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க பொலிசாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Wales-ன் Pembrokeshire-ன் Llanteg-க்கு அருகில் இருக்கும் A477 சாலையில், கடந்த வெள்ளிக்கிழமை பொலிசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது காரில் வந்த ஓட்டுனரை சேர்த்து நான்கு பேரிடமும் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் Dorset-ல் இருந்து Milford-க்கு நாங்கள் வாங்கவுள்ள படகை பார்ப்பதற்கு சென்று கொண்டிருப்பதாகவும், 200 மைல் பயணித்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து பொலிசார், அவர்களுக்கு, ஊரடங்கு விதியை மீறியதாக கூறி நான்கு பேருக்கும் அபராதம் விதித்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து, இன்ஸ்பெக்டர் Andy Williams கூறுகையில், தங்கள் சொந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை புரிந்து கொள்ள முடியாத ஒரு சில சிறும்பான்மையினரை நாங்கள் இன்று வரை சந்தித்து வருகிறோம்.
கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் வரை, ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்பதுடன், முற்றிலும் தேவைப்படும்போது மட்டுமே அவர்கள் பயணிப்பதை உறுதிசெய்வது மிக முக்கியம்.
எங்கள் முக்கிய நோக்கம் எங்கள் முக்கிய பணியாளர் சகாக்களையும், பொது மக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்று கூறியுள்ளார்.