மே மாதத்திற்கான ஐயாயிரம் ரூபா வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வீடுகளுக்கு சென்று கொடுப்பனவுகளை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதியோர், விஷேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர்கள், விவசாய ஓய்வூதிய பெறுநர்கள், மீன்பிடி ஓய்வூதிய பயனாளிகள் போன்றோருக்கே இந்த பணம் வழங்கப்படவுள்ளது.






