வாயில் துணியை அமுக்கி சிறுமியை தீவைத்து எரித்தது ஏன்?.. குற்றவாளியின் அதிரவைக்கும் வாக்குமூலம்

தமிழகத்தையே அதிர வைத்த தீ வைத்து எரிக்கப்பட்ட விழுப்புரம் சிறுமியின் கொலைக்கு கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்குமூலம் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஜெயபால் மற்றும் ராஜி தம்பதியினரின் மகள் தான் ஜெயஸ்ரீ. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியில் வசிக்கும் இவர்கள் விவசாயக் கூலி வேலையும், சொந்தமாக பெட்டிக்கடையும் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு மேலும் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெயஸ்ரீயைக் கட்டிவைத்து அவரது மீது, பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததில், சிறுமி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேசிய அளவில் எதிரொலித்த இந்த சம்பவத்தால் தேசிய குழந்தைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதையடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்த பொலிசார், அதிகார போதையில் மிருகங்களாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஜெயபால் குடும்பத்திற்கும், எங்களுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக பகை இருந்துள்ளது என்றும் அரசியல் கட்சியில் இருக்கிறோம் என்று கூட பயம் இல்லாமல் எதிர்த்து பேசினான்.

அதுமட்டுமின்றி நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்ப்பதாலும், சொந்தமாக பெட்டிக்கடை வைத்து சம்பாதிக்கிறோம் என்ற திமிரு அதிகமாக இருந்தது.

4 மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோரை அடித்தும் எங்கள் மேல் அவர்களுக்கு பயம் இல்லாமலும், மேலும் எங்களது சண்டையின் போது ஜெயஸ்ரீ அதிகமாக திட்டிவந்ததால், அவள் மீது அதிகமான கோபம் இருந்துவந்தது. அதுமட்டுமில்லாமல் எங்கள் மீது பொலிசிலும் புகார் கொடுத்தனர்.

அதனால் தனியாக கடையில் இருந்த நிலையில், இந்த குடும்பத்திற்கு இன்னும் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதால், அவளது வாயில் துணியை வைத்து அழுத்தி வீட்டிற்குள் இழுத்துக்கொண்டு போய், கை, கால்களைக் கட்டி அங்கிருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி உயிரோட கொளுத்திவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.