ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், நாளை (13) முதல் பயணிகள் போக்குவரத்திற்கு ரயில்வே திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போதே, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
நிறுவன அடையாள அட்டையின் மூலம் ரயில் அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.






