கொழும்பில் இன்று முதல் கடுமையாகும் சட்டம்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை இயல்வு நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எனினும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளையும் மீறி மக்கள் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் கடுமையான சட்டங்களை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 212ஆகும்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட 23 பிரதேசங்களில் பொது போக்குவரத்து சேவையை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளினதும் உடலின் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே ரயிலில் ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.