மீண்டும் 5000 ரூபாய் வழங்க தீர்மானம் : பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஜூன் மாதத்திலும் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

சமுர்த்தி பயனாளிகள், மூத்த பிரஜைகள், அங்கவீனமுற்றோர், சிறுநீரக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக வருமானத்தை இழந்தோருக்கு ஏப்பிரல் மாதம் தொடக்கம் 5000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்போது ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவது உறுதி என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் என பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.