யாழ் செம்மணி வளைவு பகுதியிலும் செருப்பு அணிவிக்கப்பட்ட சுமந்திரனின் உருவப்பொம்மை

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய ஆயுத போராட்டம் தவறானது என்ற சுமந்திரனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரின் உருவப்பொம்மை யாழ் செம்மணி பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி வரவேற்கிறது வளைவிற்கு அண்மையில் இந்த உருவப்பொம்மை வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் திலீபன் நினைவிடத்திற்கு அண்மையாக உருவப்பொம்மை வைக்கப்பட்டு, செருப்பு மாலையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.