யாழ்ப்பாண பொலிஸாரின் அதிகாரப் போக்கால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!

யாழில் முச்சக்கர வண்டியில் சென்ற கர்ப்பிணிப் பெண்னை இறக்கி கட்டாயப்படுத்தி வீதியால் நடந்து செல்லுமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக முச்சக்கர வண்டியில் கர்பிணிப்பெண்மணியும், அவரது வயோதிபத்தாயும் நேற்று காலை 8 மணியளவில் சென்றுள்ளனர்..

இந்நிலையில், மணிக்கூட்டு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் முச்சக்கர வண்டியை மறித்த பொலிஸார், கர்ப்பிணிப் பெண்ணையும் தாயையும் இறங்கி வைத்தியசாலை வரை நடந்தே செல்லுமாறு கட்டயப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து வேறுவழியின்றி குறித்த கர்ப்பிணிப் பெண் பெரும் சிரமப்பட்டு வீதியால் நடந்து சென்றுள்ளார். அவ்வாறு கஸ்டப்பட்டு நடந்து சென்றதை அவதானித்த மக்கள் மிகவும் கவலையுடன் சம்பவம் தொடர்பில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.