சடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீன தூதர்

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் டு வேய் அவரது இல்லத்தில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் டெல் அவிவ் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீன தூதுவர் கடந்த பெப்ரவரியிலேயே இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்தபோது அவரின் மனைவியும் மகனும் அவருடன் இஸ்ரேலில் தங்கியிருக்கவில்லை என தெரியவருகிறது.

டு வெய் தமது படுக்கையிலேயே இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் வன்முறைகள் நிகழ்ந்ததாக எவ்வித அடையாளங்களையும் காணமுடியவில்லை என்று இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 57 வயதான சீன தூதுவர் ஏற்கனவே யுக்ரெய்னில் சீன தூதுவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.