நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தமது தங்க நகை, காணி உறுதிப் பத்திரம், பணம் போன்றவற்றை எடுத்து தயாராக வைத்திருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இடர்வலையப் பகுதிகளில் அனர்த்தம் ஏற்படுமாயின் அந்த பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயரும் போது தயாரான வகையிலேயே இருக்கும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.






