பல்கலை. அனுமதிக்கான விண்ணப்பங்களை சான்றுதிப்படுத்த மே 20,21,22ஆம் திகதிகளில் பாடசாலை அலுவலகங்களைத் திறக்க அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்கும் மாணவர்களது விண்ணப்பப்படிவங்களை சான்றுப்படுத்தும் நடவடிக்கைகளை நாளைமறுதினம் புதன்கிழமை, மறுநாள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலையில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் பாடசாலை அனுவலகங்களைத் திறந்து மாணவர்களது விண்ணப்பங்களை சான்றுப்படுத்தி வழங்குமாறு அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தந்த பாடசாலை ஒவ்வொன்றின் அதிபர் அல்லது உப அதிபர் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக சேர்க்கை பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு சான்றுதிப்படுத்தி வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.