லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) எரிபொருள் விலையை அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க முடிவு செய்யவில்லை மின் மற்றும் எரிசக்தி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் 92 ஒக்டேன் ஒக்டைன் பெற்றோலின் விலையை 5 ரூபாயால் அதிகரிப்பதாக நேற்றிரவு அறிவித்தது.
“உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவாகக் காணப்படும் நிலையில் ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவில் இலங்கை அரசின் தலையீடு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகிக்கும் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தவில்லை என்று போக்குவரத்து முகாமைத்துவம், எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.






