அரசு நிறுவனங்களை அரசியல் மயமாக்க தான் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அரசாங்கம் அவசியமான வருமானத்தை உருவாக்க வேண்டும், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடுமையாக உழைக்கும் பொது மக்களின் பணத்தின் மூலமே அரச நிறுவனங்கள் இயங்குகின்றன. எனவே அவ்வாறான நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விட கூடாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஏனைய நாடுகள் போன்று இலங்கையிலும் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நிலவும் நிலைமைக்கு மத்தியில் நிறுவனங்களின் பிரதானிகள் நாடு குறித்து சிந்தித்து செயற்ட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.






