பேஸ்புக் செய்தியால் நடந்த விபரீதம்! யாழ் – ஏ9 வீதியோரத்தில் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி இருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.

கள்ளியங்காட்டை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த நபர் சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரின் மரணம் தற்கொலையா, கொலையா என்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாழில் பேஸ்புக்கில் வெளியான தகவலால் A9 வீதியில் தூக்கில் தொங்கி இளம் குடும்பஸ்தர் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

பேஸ்புக்கில் வெளியான தவறான தகவலால் மனவிரக்தியடைந்த நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் ஏ-9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள், சாவகச்சேரி பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரியில் உள்ள புகைப்பரிசோதனை நிலையம் ஒன்றில் பணிபுரியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.

குறித்த நபர் தொடர்பில் நேற்று முன்தினம் பேஸ்புக் ஒன்றில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், புகைப்பட ஆதாரங்களும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட மன விரக்தியே இவர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த பேஸ்புக்கில் உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like