வரலாற்றில் முதல் முறையாக நீரில் மூழ்கிய பேருந்து நிலையம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலங்கொட நகர பேருந்து நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

பலங்கொட நகரம் ஊடாக, தொர வெல ஆற்ற நீர் பெருக்கெடுத்தமையினால் இவ்வாறு பிரபலமான பேருந்து நிலையம் நீரில் மூழ்கியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு இன்று பிற்பகல் இந்த பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியாக கூறப்படுகின்றது.

பலங்கொட உட்பட மலையகத்தில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like