யாழில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 10.20 மணியளவில் கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேர்ந்துள்ளது.

மின்கம்பம் நாட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் நிறுவனம் ஒன்று மின்கம்பங்கள் நடும் வேலையை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு மின்கம்பங்கள் நடும் போது மின்சாரசபைக்கு அறிவித்தல் வழங்கி மின்சாரத்தை துண்டிக்காது, வேலையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இளைஞன் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like