ஒரே அறையில் வெவ்வேறு இடத்தில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. பெற்ற தாய் தான் காரணமா? விசாரணையில் பொலிசார்

வீட்டில் ஓன்லைன் வகுப்பை கவனிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற இரட்டை சகோதரிகள் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் காட்பாடியை சேர்ந்த என்ஜினீரியர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் பத்மபிரியா ஹரிப்பிரியா இருவரும் இரட்டையர்கள். இருவரும், காட்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு தற்போது முடித்துள்ளனர்.

தொடர்ந்து 12ஆம் வகுப்பிற்கான பாடங்கள் ஓன்லைனில் படித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை, ஓன்லைன் வகுப்புகள் நடக்க இருக்கிறது, அதை கவனிக்க போகிறோம் என்று கூறிவிட்டு, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர்.

வீட்டின் கீழே அம்மாவும், அவர்களது சகோதரரும் இருந்துள்ளனர். வெகு நேரமாகியும் உணவருந்த வரவில்லை என்பதால் இவர்களை அழைத்து வர கவுரி சென்றுள்ளார்.

அப்பொழுது உட்புறமாக ஜன்னல் மற்றும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், அக்கம் பக்கத்தினரை அழைத்து ஜன்னலை உடைத்து அவதானித்த போது, இருவரும் வெவ்வோறு பக்கம் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.

பின்பு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் தாய் கவுரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் வீட்டில் அனைத்து வேலைகளையும் அவர்கள் இருவர் தான் செய்வார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்கள் சரியாக சமைக்கவில்லை என்று கவுரி அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பாராம்.

அதனால் அம்மாவுடன் ஏற்பட்ட தகராறில் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகிறார்கள். எனினும் முழு விசாரணை முடிந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என நம்பப்படுகிறது.