வீட்டில் படையெடுத்துகொண்டே வந்த 120 குட்டி பாம்புகள்… அதிர்ச்சியில் உறைந்துபோன நபர்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிந்த் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜீவன் சிங் குஷ்வா. இவரின் வீட்டில் கடந்த வாரம் சில குட்டிப் பாம்புகள் தென்பட்டுள்ளன. உடனே அதிர்ந்து போன அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களின் உதவியுடன் பாம்புகளை வெளியேற்றினார்.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவரது வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் பாம்புகள் சாரை சாரையாக படையெடுக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஒருவாரத்தில் சுமார் 123 விஷப்பாம்புகள் அவரது வீட்டிற்குள் எங்கிருந்தோ தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்துள்ளன. இதனைக் கண்டு அச்சத்தில் உறைந்த ஜீவன் சிங், “வீட்டுக்குள் பாம்பு தொல்லை.. வெளியே சென்றால் கொரோனா என தூக்கம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இதனிடையே ஜீவன் சிங்கின் வீட்டில் ஏதோ ஒரு பகுதியில் பாம்பு முட்டை போட்டிருக்க வேண்டும் என்றும் அதில் இருந்து குட்டிப் பாம்புகள் நூற்றுக்கணக்கில் வெளியேறுவதாகவும் சந்தேகித்த வனத்துறையினர், ஜீவன் சிங்கின் வீட்டில் குட்டிப் போடும் பாம்பினையும் இதர பாம்புகளையும் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பாம்புகளின் இந்தத் தொடர் படையெடுப்பை அக்கிராம மக்கள் கெட்ட சகுனமாகக் கருதுவதால், மேலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.