டிக்டாக்கில் லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு பூனையை தூக்கில் தொங்க விட்ட இளைஞர்.. அதிர்ச்சியடைந்த இணையவாசிகள்!

டிக்டாக்கில் அதிக லைக் பெறுவதற்காக வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு அதை வீடியோவாக பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டிக்டாக் செயலியில் மூழ்கி, எதையாவது செய்து அனைவரின் கவனத்தையும் பெற தினந்தோறும் ஏதேனும் ஒரு கூத்து அரேங்கேறி வருகிறது. இளைஞர்களின் இன்றைய உலகம், டிக்டாக்கில் செயலியில் சுருங்கி கிடப்பதை பார்க்க முடிகிறது.

டிக்டாக் செயலியில் பிரபலமாக கற்பனைக்கு எட்டாத விஷயங்களை முயற்சிப்பதோடு, அது சில நேரங்களில் விபரீதத்தில் போய் முடிந்து விடுகிறது.

அப்படியான ஒரு சம்பவம் நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிகுளத்தை என்கிற கிராமத்தில் தங்கராஜ் என்ற இளைஞர் வசித்து வருகிறார். டிக்டாக் மீது மோகம் கொண்ட தங்கராஜ், அவரது தந்தையின் பண்ணையில் உள்ள மாடுகளை வைத்து அவ்வப்போது டிக்டாக் செய்து பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

ஆனால் தங்கராஜ் எதிர்பார்த்த அளவிற்கு லைக் கிடைக்காததால் வேறு முயற்சிகளையும் கையாண்டுள்ளார். அதில் ஒரு படி மேலே சென்று தனது வீட்டில் வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு டிக்டாக் எடுத்து பதிவிட்டுள்ளார்.

அவர் நினைத்தது போல லைக்குகள் கிடைத்த வேளையில், காவல்துறையினர் வீட்டிற்கு சென்று பூனையை சித்தரவைதை செய்து கொலை செய்ததால் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கராஜை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.