தவிடுபொடியானது ட்ரம்பின் நம்பிக்கை! மீண்டும் கொத்து கொத்தாக மரணிக்கப்போகும் மக்கள்

கொரோனாவுக்கு மருந்து என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் எந்த ஒரு பயனும் இல்லை என்று லான்செட் பெரிய அளவிலான புறத்தரவு ஆய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடைய நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் எந்த ஒரு பயனும் இல்லை.

மற்றொரு பாக்டீரியா கிருமி எதிர்ப்பு மருந்தான அசித்ரோமைசினுடன் சேர்ந்து கொடுத்தாலும் இல்லையென்றாலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொரோனாவுக்கு வேலை செய்யவில்லை என்பதே லான்செட் கண்டுபிடிப்பாகும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து கொடுக்கப்பட்ட 15,000 நோயாளிகள் குறித்த தரவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களாகும்.

ஆய்வாளர்கள் கருத்தின் படி இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு இருதய நோய் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் இருதய நோயாளிகளாக மாறுகின்றனர்.

கோவிட் 19 நோயாளிகளுக்கு குளோரோகுய்ன், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை பயன்படுத்தவே கூடாது என்கின்றனர் லான்செட் ஆய்வாளர்கள்.

லூபஸ், முடக்குவாதம் போன்ற தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் நோய்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இந்த நோய்கள் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலம் வரை ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எடுத்துக் கொள்வது அவசியம்.

இந்த மருந்துகள் சோதனைச்சாலை டெஸ்ட்களில் வைரஸ்களுக்கு எதிரான விளைவுகளைக் காட்டியிருக்கலாம், ஆனால் கோவிட்19 நோயாளிகள் சிகிச்சையில் இது உதவாது என்பதே ஆய்வாளர்களின் துணிபாகும்.

ஹைட்ராக்சி குளோரோகுய்னினால் இருதய நோய்களும் இதனால் மரணமும் ஏற்படும் என்று ஆய்வாலர் மெஹ்ரா எச்சரிக்கிறார்.

குளோரோகுய்ன், ஹைட்ராக்சி குளோரோ குய்ன், அசித்ரோமைசின், கிளாரித்ரோமைசின் ஆகியவற்றை கரோனா நோயாளிகளுக்கு கொடுத்ததில் மருத்துவமனை மரணங்கள் அதிகரித்துள்ளன. மேலும் பல மரணங்கள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இவர்களுக்கு இருதயத்துடிப்பு சீரற்ற முறையில் இருந்ததும் இருதயத்தின் கீழ் அறை வெகுவேகமாக துடிப்பதும் தெரியவந்தது.

குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கொடுத்த 6 இல் ஒரு நோயாளி இறந்திருக்கிறார்.

இந்த 4 மருந்துகளையும் சேர்க்கையாக கொடுப்பதன் மூலம் 5-ல் ஒரு நோயாளி இறப்பது தெரியவந்தது.